பெரியாரின் புத்தகங்கள்

தனது தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியை சுமந்துகொண்டு நமக்காக போராடிய அந்த வீர கிழவனின்
சொத்தான எழுத்துக்களை இத்தணை நாள் மக்களிடமிருந்து பிரித்து தன் மகனுக்கு ஆதாயம் தேடிக்கொண்டிருந்தார் தோழர்.வீரமணி. பெரியாரின் எழுத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க மக்கள் மன்றத்திலும்,வழக்கு மன்றத்திலும் அயராது போராடி அதில் வெற்றி பெற்றுள்ள “பெரியார் திராவிட கழக” தோழர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.பெரும் பொருட்செலவுகளை பொருட்படுத்தாமல் இன்று அதை கணிணியிலும் ஏற்றியுள்ளனர்.
பெரியாரின் உண்மையான வாரிசுகள் சமூக நீதி போரில் போர்குணத்துடன் போராடும் தோழர்களே !!அவர்கள் பெரியாரை அறியாவிட்டாலும் கூட!!

பெரியாரின் புத்தகங்களை படியுங்கள் அதை மக்களிடத்தில் எடுத்துச்செல்லுங்கள்.

இது குறித்து பெரியார் திராவிட கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

“1983 ஆம் ஆண்டில் தொகுத்து 2003 ஆம் ஆண்டுவரை 20 ஆண்டுகளாக தோழர் வீரமணி அவர்களால் முடக்கிவைக்கப்படிருந்த குடி அரசு இதழ்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 2003 ஆம் ஆண்டில் (1925 குடி அரசு) வெளியிடப்பட்டது. 1925 முதல் 1938 வரையிலான 28 தொகுதிகளை மொத்தமாக 2008 ஆம் ஆண்டு பெரியார் தி.க வெளியிடத் தயாரானபோது பெரியார் சிந்தனைகள் வெளிவராமல் தடுக்க தன்னால் ஆன எல்லாவகையான காரிய்ங்களையும், சட்டரீதியான காரியங்களையும் செய்து பார்த்தார் தோழர் வீரமணி. பொறுமையாகக் காத்திருந்தோம். 

உயர்நீதிமன்றம் தோழர் வீரமணியிடமிருந்து பெரியாரை விடுதலை செய்துள்ளது. நீதிபதி சந்துரு அவர்கள் குடி அரசை பெரியார் தி.க வெளியிட எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பு கொடுத்தார். அதையும் எதிர்த்து வீரமணி மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் நியாயமில்லை. பெரியார் திராவிடர் கழகம் குடி அரசு தொகுப்புகளை வெளியிட எந்தத் தடையும் இல்லை என இன்று (09.06.2010) மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை – 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பி வைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைக்கிறோம்.  படியுங்கள் – பரப்புங்கள் – வாழ்வில் கடைபிடியுங்கள்.

1.குடிஅரசு 1925 தொகுப்பு முன்னுரை

2.குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 1

3.குடிஅரசு 1926 தொகுப்பு பகுதி 2

4.குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 1

5.குடிஅரசு 1927 தொகுப்பு பகுதி 2

6.குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 1

7.குடிஅரசு 1928 தொகுப்பு பகுதி 2

8.குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 1

9.குடிஅரசு 1929 தொகுப்பு பகுதி 2

10.குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 1

11.குடிஅரசு 1930 தொகுப்பு பகுதி 2

12.குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

13.குடிஅரசு 1931 தொகுப்பு பகுதி 2

14.குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 1

15.குடிஅரசு 1932 தொகுப்பு பகுதி 2

16.குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 1

17.குடிஅரசு 1933 தொகுப்பு பகுதி 2

18.குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 1

19.குடிஅரசு 1934 தொகுப்பு பகுதி 2

20.குடிஅரசு 1935 தொகுப்பு பகுதி 2

21.குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 1

22.குடிஅரசு 1936 தொகுப்பு பகுதி 2

23.குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 1

24.குடிஅரசு 1937 தொகுப்பு பகுதி 2

25.குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 1

26.குடிஅரசு 1938 தொகுப்பு பகுதி 2

27.ரிவோல்ட் ஆங்கில நூல் தொகுப்பு

பெரியார் திராவிடர் கழகம்

பின்னூட்டமொன்றை இடுக