தொகுப்பு | ஜூலை, 2010

8 ஜூலை

ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் எமது சிறுகதை இரண்டாம் இடம் பெற்றுள்ளது
சொடுக்கவும்vijay

செம்மொழி மாநாடு

6 ஜூலை

tamilan(cartoon.vinavu.com)

(கோவையில் நடைபெறுகின்ற செம்மொழி மாநாட்டையும்,ஆளும் வர்க்கத்திற்க்கு இம்மாநாட்டை நடத்தவேண்டிய அரசியல் தேவையும்,அதில் புதைந்துள்ள துரோகமும் முகமூடி அணிந்துகொள்ள துடிக்கும் தந்திரமும் அதில் சிக்கியுள்ள தமிழரின் பிரச்சணைகளையும் எனக்கு தெரிவிக்கப்பட்ட நான் தெரிந்துகொண்ட தமிழரின் நிலை குறித்த அரசியல் பிரச்சணையை குறித்து கவிதை என்ற பெயரில் எழுத முயன்றேன்)

இரத்த சகதியில் உழன்ற பன்றி

மனிதனாக முயல்கிறது

கோவையில்!

மனிதம் கொன்று

பிணத்தை புசித்து

மானம் இழந்து

தாயை புணர

நாற்காலியை நக்கினாய்-இன்று

தாய்மொழி என்கிறாய்

தாயை இழந்தவனுக்கு எது

தாய்மொழி ?

ரத்தகதறலும்,

விம்மிய தொண்டையும்,

பிளந்த மார்பும்,

புணர்ந்த சடலமும்,

பூப்பெய்திய பெண்ணும்,

சிங்களக் காவலனும்,

முள்வேலியும், பசித்தவயிறும்,

வற்றாத மானமும்,

எம்மொழியாயிருக்க

மொழியறித்த கரையானே

இனத்தின் வீபிடணனே

உழைக்கும் மக்களே மொழிக்காவலர்-அவர்தம்

சிவந்த கைகளே செம்மொழி பேசும்-அவர்தம்

தலைவனே மொழித்தலைவன்

தலைவன் வருவான்-தம்பி

வருவான்

தமிழரை காப்பான்-அவர்தம்

தமிழை காப்பர்

Follow

Get every new post delivered to your Inbox.