ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் எமது சிறுகதை இரண்டாம் இடம் பெற்றுள்ளது
சொடுக்கவும்vijay
8 ஜூலை
15 ஜூன்
(தோழர்களே ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் எமது சிறுகதை இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)
போட்டியின் முடிவுகளை தெரிந்துகொள்ள சொடுக்கவும்
போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட அணைவருக்கும் நமது வாழ்த்துகள்
நூலகம்
4 மார்நூலகம்
போலி ஜனநாயகத்தின்
சோசலிச கருவறை!
மீண்டும் பிறக்க உள்சென்றேன்
லெனின் தோழரானார்
பெரியார் மானம்காத்தார்
என்னை தெரிந்துகொண்டேன்
நான்
பிறப்புரிமைக்காக,
தூக்குக்கயிறை சுமையாக்கியவர்களின் வாரிசு,
துப்பாக்கி ரவைகளால் உடம்பை அலங்கரித்தவர்களின் தோழன்,
பிரெங்சு ருஷ்ய ரத்தவரலாற்றின் தழும்புகள்.
இந்திய காயத்தின் மருத்துவன் நான்.
பிறந்தேன் சோசலிசனாய்!
பாசிச கடவுள்
10 அக்இரண்டு நாள் விடுமுறை முடிந்து பள்ளி செல்ல வேண்டும் என்று எண்ணும் போதே மனதிற்க்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
“சாமி கும்பிட்டுட்டு போ” அப்பாவின் குரல் ..எதிர் வீட்டு நண்பருடன் பேசிக்கொண்டே.. பூஜை அறை சென்றேன்.கை கூப்பியது.கண் முடியது.
வழக்கம் போல் முதல் ரேங்க்(rank) வாங்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.
அப்பா நண்பருடன் சற்று கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.” இல்லிங்க நியாயம் எல்லாம் யாருங்க பாக்காங்க?நியாயப்படி எனக்கு வர வேண்டிய
ப்ரமோசன்(promotion).அவன் பின்னடியே போன அவரின் புகழ் பாடிகளுக்கும், அவருக்கு ஜால்ரா அடித்தவர்களுக்கும் கொடுத்துட்டார்.
ஒரு உயர் பதவியிலிருப்பவர்கள் இப்படி நடக்கலாமா?” அப்பாவின் கோபம் என்னை பார்த்ததும் தணிந்தது.
“அப்பா office போகல”?வினவினேன் “ம்.. இல்லை” வெருப்புடன் பதில் வந்தது.புரிந்து கொள்ள முடிந்தது.
பாதிநேரம் பேசாமலே கடந்துவிட்டது.வழக்கமாக பைக்கில் அழைத்து வரும்போது இடைவிடாமல் பேசுபவர் இன்று ஏதும் பேசவில்லை.
அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு யாரோ சிலர் மேலாலருக்கு ஜல்ரா அடித்தார் என்பதற்காக மாற்றி கொடுக்கப்பட்டது.
இதை நேற்று இரவு அம்மாவிடம் சொல்லும் போது கேட்டேன்.பின்பு தாத்தா, சென்னையிலிருக்கும் சித்தப்பா,மும்பை மாமா என அணைவரிடமும்
சொல்லி ஆதங்கப்பட்டாகிவிட்டது.இன்று காலையில் தான் பட்டியல் முடியவில்லை, தொடர்கிறது என்று புரிகிறது.
இன்னும் எத்தணை பேர் என்று தெரியவில்லை.சொந்தங்களின் எண்ணிக்கை தலையை சுற்றியது.
அவரே ஆரம்பித்தார்.”அரையாண்டு(half yearly) எப்போ ஆரம்பிக்கிறது? போன தடவை போல இல்லாம முதல் ரேங்க் வாங்க வேண்டும்”.என்றார்.
“.ம்…”என்றேன்.
திங்கட்கிழமை காலை முதல் வகுப்பு கீதா,chemistry.நினைக்கும் போதே முகம் சற்று வாடியது.பராவாயில்லை இரண்டாம் வகுப்பு நமது சார்லஸ்
என்பதால் முதல் வகுப்பு கவலையளிக்கவில்லை.
இன்று எதோ ஹைட்ரஜன் பிணைப்பு(hydrogen bond) பற்றிய பாடம்.முதல் பத்து நிமிடம் ஓடியது.”கங்குலி சதம் அடித்துவிட்டார்.
நான் இந்திய அணிக்காக விளையடி உலக புகழ் பெற்றுவிட்டேன்.மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று சன் டிவிக்கு பேட்டியும் கொடுத்துவிட்டேன்.’
வேறு என்னிடம் கற்பணை இல்லாததால் கானவுலகம் இருட்டியது.வகுப்பறைகு வந்தேன்.
“தாள்கள் எளிதாக கிழிவதற்க்கு காரண்ம் அதிலுள்ள H-பிணைப்பு” கூறிகொண்டிருந்தார். திடிரென “இப்படி சரஸ்வதியை மிதிக்கிராயே உனக்கு எப்படி
படிப்பு வரும்?” ஆசிரியை சற்று கடுப்பாகிவிட்டார்.நான் பின்னால் திரும்பி பார்த்தேன்,அணைவரும் முன்னால் பார்த்தார்கள்.முன்னால் திரும்பினால்
அணைவரும் பின்னால் பார்த்தார்கள். புரிந்து கொண்டேன். வந்த வினா எனக்கு தான்.மீண்டும் “இப்படி சரஸ்வதியை மிதிக்கிராயே உனக்கு எப்படி படிப்பு
வரும்?” என்னை பார்த்து கேட்டார்.எனக்கு புரியவில்லை.இடது பக்கம் திரும்பி சரஸ்வதியை பார்த்தேன்.வகுப்பில் என்ன நடக்கிறது என்றே
தெரியாமல் அவள் ஏதோ டி.விக்கு பேட்டி கொடுக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.
மீண்டும் அதே வினா.என் காலை பார்த்து கேட்டார்.இப்பொழுது தெளிவாக புரிந்தது.நான் ஏதோ புத்தகத்தை மிதித்துக்கொண்டிருந்தேன்.
மீண்டும் ஹைட்ரஜன் கதை ஆரம்பமானது.எனக்குள் பலத்த சந்தேகம்.என்ன விந்தை! என் கனவுலகம் பகலாகிவிட்டது.
“சற்று முன்பு வரை தாள்கள் H-பிணைப்பால் ஆனது என்று கூறியவர் தீடிரென்று சரஸ்வதி என்கிறார்”.புரியவில்லை.நன்கு அறிவியல் படித்த
என் ஆசிரியை அரை மணி நேரத்திற்கு முன்பு அனுக்கள்(atoms),மூலக்கூறுகள்(molecule) என்றார்.அவரே இப்பொழுது சரஸ்வதி என்கிறார்.
எதை நம்புவது என்று புரியவில்லை.
“ஒரு வேளை சரஸ்வதியாயிருக்குக்மோ ..ஐயயோ பாவம்” என்னை அறியாமல் முனுமுனுத்தேன்.அமெரிக்காவில் காலை கடன்களை முடித்த பிறகு
டிஷ்யு ()தாள்களை உபயோகிக்கிறார்கள் என்று வாரமலரில் படித்த நியாபகம்.பாவம் சரஸ்வதி எத்த்ணை பேரின்…….! ஐயயோ.!ஓ அதனால் தான்
அவரை கடவுள் என்கிறார்கள் போலும்.சமாதானபடுத்திக்கொண்டேன்.
அப்பாடா! முடிந்தது.அடுத்து சார்லஷ்,இவர் பாடங்களை தவிர மற்ற அணைத்தையும் பேசுவார்.
அதனால் இவரை அணைவருக்கும் பிடிக்கும் என்னைப்போல…!அதோ வந்துவிட்டார்.கனவு நண்பர்களிடம் பிரியா விடைபெற்றேன்.அயினும் அப்பாவின்
முகம் அடிக்கடி நிழலாடியது. பாடங்களை ஆரம்பித்தார்.இன்று பாசிசம்.
‘பாசிசவாதிகள் தங்களை பற்றி புகழுபவர்களை விரும்புவார்கள்.தான் தான் சர்வவல்லமை படைத்த தலைவராக வலம் வர வேண்டும் என்று
எண்ணுவார்கள்.இவர்கள் மேலண்மையை ஏற்க மறுப்பவர்களை தண்டிப்பார்கள் மீறினால் கொன்று குவிப்பார்கள்.
ஹிட்லர் பற்றியிம் கூறினார்.’
அவர் இதை இன்றைய அரசியல்வாதிகளோடு ஓப்பிட்டார்.அரசியல்வாதிகள் தங்களுக்கு கூழை கும்பிடு போடும் தங்கள் மேலாண்மையை ஏற்று
ஜல்ரா அடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்றார்.”ஆமாம் என் அப்பாவிற்க்கு கூட இதால் தான் பதவி உயர்வு பறிக்கப்பட்டது”
என்றேன். சித்தப்பா தாத்தா தாண்டி நண்பர்களிடமும் சொல்லியாகிவிட்டது.இதற்க்குள் அப்பா எத்தணை பேரிடம் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.
வேரு ஏதோ எண்ணம் மனதிற்க்குள் எழுந்தது.புரியவில்லை. ” ‘ஜல்ரா அடிப்பவர்,நான்’ ‘மேல்திகரி ,கடவுள்’” ஏதோ ஒற்றுமை இருப்பது போல்
தோன்றியது.பாசிசவாதி தனக்கு ஜல்ரா அடிப்பவர்களுக்கு பதவிவுயர்வு அளிக்கிறார்.கடவுளோ தன்னை புகழும் பக்தர்களுக்கு முதல் ரேங்க் (rank)
எடுக்க உதவிபுரிந்தால் என்ன சொல்வது. ஏதோ ஒற்றுமை இருப்பது போல் தோன்றியது.
மாலை வீடு திரும்பியாயிற்று.அப்பாவை காணோம்.இரவில் தான் வந்தார்.”அப்பா, ஜல்ரா அடிப்பவருக்கு தாங்கள் மேலதிகாரி பதவியுயர்வு வழங்கியது
எப்படியோ அப்படித்தானே நான் முதல் ரேஙக் வாஙக கடவுள் உதவிபுரிந்தால் ஆகும்.” வினவினேன்.
“யாரை யாரோடு ஓப்பிடுகிறாய்.கடவுளும் அவனும் ஒன்றா?” மேலதிகாரியின் மீதுள்ள் கோபத்தை உதிர்த்தார்.
தனது பின்புறம் திரும்பி கையால் கழுத்திலும், பின் கையிலும் ஏதோ செய்தார்.என்க்காக மன்னிப்பு கேட்டார் என்று புரிந்தது.
காலை வழக்கம் போல பூஜை அறை சென்று வழிபட்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.அப்பா, வழியில் வண்டியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார்.
“இன்று செவ்வாய் கிழமை, நல்ல நாள் .நம் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து வழிபடவேன்டும்” என்றார்.
சார்லஸ் ஆசிரியர் வகுப்பு.வழக்கம் போல் கதை ஆரம்பமானது.பேச்சு லஞ்சத்தின் பக்கம் சென்றது.அரசியல்வாதிகள் கையழுத்துபோடவும் ,
வேறு பல வேலைகளுக்கும் லஞ்சம் வங்குவது பற்றி குறிப்பிட்டார்.பின்பு ஒரு நாளிதழை காட்டி “இந்த ஆள் அடுத்தவர்களை மிரட்டி அவர்களை
தனக்கு வேண்டியதை செய்யுமாறு செய்வானாம்.தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வான்,கட்டபஞ்சாயத்து செய்வான் ” என்று கூரினார்.
சுருங்க சொன்னால் அவன் கூலிப்படை தலைவன் என்றும் அவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டான் என்றும் போடப்பட்டிருந்த்து.
மாலை கோயிலுக்கு சென்று கொண்டிருந்தோம்.அம்மா,அப்பா,நான் மூவரும் பைக்கில் சென்றுகொன்டிருந்தோம்.
இருவரும் குடும்ப கஷ்டங்களை பேசிக்கொண்டிருந்தார்கள்.அதற்க்கு காரணம் குடும்ப கோயிலுக்கு செய்யாதது தான் என்று கண்டுபிடித்திருந்தார்கள்.
அதனால் தான் இந்த தீடீர் முடிவு.
லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவிபுரியும் அரசியல்வாதி,பொங்கல் வாங்கிக்கொண்டு அருள்புரியும் கடவுள் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை.
மனிதன் லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவிபுரியலாம் ஆனால் கடவுள் பொங்கல் வாங்கிக்கொண்டு உதவிபுரிந்தால் இம்முதளாளித்துவ உலகில்
இவரை எவ்வாறு அழைப்பார்கள்.முன்பு வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து சுரண்டிணார்கள்
என சார்லஸ் ஆசிரியர் கூரியிருந்தார்.அப்படியாணால் கடவுள் ஒரு வேளை உணவுக்காக் வருடம் முழுவதும் உழைக்கும் முதளாளித்துவ கொத்தடிமையா?
பாவம் கடவுள்களுக்கு தொழிற்சங்கம் இல்லை போலும்.இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.இருந்திருந்தால் அவர்களும் வேலை நிறுத்தம் செய்திருப்பார்கள்.
பிரம்மா படைத்திருக்கமாட்டார்,தாய்மார்கள் மலடியயிருப்பார்கள்.சிவன் காத்திருக்காமாட்டார் ,அணைவரும் பட்டினியாயிருப்பார்கள்.திருமால் அழிக்கமாட்டார்,
என் தாத்தாவை காப்பாற்றியிருக்கலாம்.சரஸ்வதி தாள்களுக்குள் வரமாட்டார்.அணைவரும் முட்டாளாகியிருப்பார்கள்.
சரஸ்வதி டிஸ்யு தாள்களை தீண்டவேண்டியதில்லை.சூரிய பகவான்,வருணன்,வாயு,சந்திரன் வேலை நிறுத்தம் செய்தால்?ஐயயோ நல்ல வேளை
அவர்களுக்கு சங்கம் இல்லை.நல்ல வேளை கம்யுனிசத்தை பற்றி கேள்விபடவில்லை போலும்.அவர்கள் ஒரு வேலை பொங்கலுக்காக வருடம் முழுவதும்
உழைக்கும் கொத்தடிமையாக இருப்பது நமக்கு நல்லது என்று நினைத்துக்கொண்டேன்.
தீடீரென ஒருவர் ஆட ஆரம்பித்தார்.அணைவரும் பயபக்தி ஆணார்கள்.”ஏதோ heart transplantation,kidnney transplantation கண்டுபிடித்தவர்களுக்கு
nobel prize கொடுத்ததாக படித்தேன்.ஆனால் நம்மவர்கள் god to humen transplantation கண்டுபிடித்துவிட்டு எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார்கள்.
எவ்வளவு அடக்கமுடைமை.அமாம் திருவள்ளுவர் பிறந்த மண்ணாயிற்றே அடக்கம் இருக்காதா என்ன? நம்மவர்களுக்கு எப்பொழுது nobel prize
கொடுப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே திடிரென சாமி பேச ஆரம்பித்தார்.
“ம்ம்ம்…அமாவாசை…வெள்ளி…ஆடு……”
“அம்மாவாசை வெள்ளிகிழ்மை ஆடு வெட்டி செய்யவேண்டுமாம்”அம்மா மொழிபெயர்த்தார்.
வீடு திரும்பினோம்.அம்மவுக்கும் அப்பாவுக்கும் நல்ல் திருப்தி.நம் பிரச்ச்ணை தீர்ந்துவிட்டது என்று பேசிக்கொண்டார்கள்.
ஆடு வெட்டி செய்ய்யவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.கதை எங்கேயோ கேட்ட மாதிரியில்லை.இன்று காலையில் தான் ஆசிரியர் காண்பித்த
நாளிதழில் கூலிபடை அன்பர் அடுத்தவர்களை பயமுறுத்தி கட்டபஞ்சாயத்து செய்ததாகவும்,பணம் பறித்ததாகவும் போடபட்டிருந்தது.
ஆயுதங்களை வைத்து பயமுறுத்தி பணம்பறிப்பது கூலிபடை என்றால் எதிர் காலத்தை வைத்து பயமுறுத்தி தனக்கு வேண்டியதை செய்வித்து அல்லது
தன் அடிமையாக வைத்திருப்பதை கூலிப்படை என்று கூறுவதா அல்லது அதைவிட கேவலம் என்று கூறுவதா?என்று தெரியவில்லை
“இதுவரை தன்னை வணங்கவில்லை என்பதற்க்காக நமக்கு கஷ்டங்களை கொடுத்த ஒருவரை பாசிசவாதி என்று கூறுவதை விட வேறு எதும்
பொருத்தமாக இருக்காது.”
“வணங்கினேன் ,பெருமைபடுத்தினேன் என்பதற்க்காக அல்லது ஜல்ரா அடித்தேன் என்பதற்க்காக அவர் அருள்புரிந்தால் அவர் நல்ல்வரல்ல.பாசிசவாதி”
“ஒரு பொங்கலுக்கு என்க்கு அருள்புரிந்தால் அவர் சந்தர்ப்பவாதி,கூலிபடைதலைவன்,பாசிசவாதி”
அரசியல் வாதி,கூலிபடைதலைவன்,பாசிசவாதி,ஹிட்லர்,சாமியாடியவர்,கடவுள் இவர்களுக்குள் ஏதோ மையபுள்ளி இருப்பது போல் தோன்றியது
“எவ்வாறு யோசித்தாலும் நான் வேண்டியது தவறு,அதற்க்கு அவர் அருள் புரிந்தாலும் தவறு” ,என்று தோன்றியது.
தீடீரென்று விழித்தேன்.சிந்தித்தவை கனவா அல்லது எண்ண ஓட்டமா தெரியவில்லை.அனால் ஒன்று தெரிந்தது.உண்மை
குளித்தேன்,கிளம்பினேன்.. அப்பாவின் குரல் “சாமி கும்பிட்டுட்டு போ”…. பூஜை அறைக்குள் நுழைந்தேன்,வணங்கினேன்,கடவுளின் படத்தை பார்த்தேன்.
முகத்திற்க்கு கீழே குறுமீசை இருந்தது.கையில் ஸ்வஸ்டிகா குறியீடு இருந்தது.ராணுவ உடை கிடைத்திருந்தது.என் கைகள் தானாக கீழிறங்கியது.
கால்கள் திரும்பியது.இனி எனக்கு நான் மட்டும் என்கிற தன்னம்பிக்கை பிறந்தது.மீண்டும் திரும்பிபார்த்தேன்.
பள்ளி செல்லும் வழியில் தெருமுனை தடிக்காரர்,கைத்தடியுடன் சிரித்தார்.நானும் சிரித்தேன்…..
ரசிகன்
15 செப்ரசணை என்பது மிகவும் ரசிக்கதக்கது.ரசணை பற்றி பேசும் பொழுது ரசிகனை பற்றியும் பேசுவது அவசியமாகிறது
ரசனை உள்ளவன் ரசிகனா அல்லது ரசிக்க தெரிந்தவன் ரசிகனா? என்ற கேள்வியும் எழுகிறது.இவை இரண்டிற்க்கும் உள்ள வித்தியாசம்
மேலோட்டமக பார்த்தல் தெரியாது.
ரசணை உள்ளவன் தன் ரசனையை நேசிக்கிறான்.ரசிக்க தெரிந்தவன் ரசிக்க கட்டாயமாக்கபடுகிரான் அல்லது பழகிக்கொள்கிரான்.
இவர்கள் ரசனையை விட மனிதர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பவர்கள்.
சரி நாம் விசத்திற்கு வருவோம்.நம் வாழ்வில் முழுமையக கலக்கபட்ட ஒன்று சினிமா
.நம் வீட்டு விழாக்கள் சொந்தங்கள் இல்லாமல் கூட நடக்கும் ஆனால் சினிமாபாடல்கள் இல்லாமல் நடக்க முடிவதில்லை.
காந்தி பிற்ந்தநாளை கூட TVல் புது சினிமா பார்த்து தான் கொன்டாடுகிறோம்.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்வி இல்லாமல் எந்த தொலைக்காட்சி-மக்கள் சந்திப்பு நிகழ்சியையும் பார்க்கமுடிவதில்லை.
இல்லை இது அத்தியாவசியமான கேள்வியா என்ற சந்தேகமும் எழுகிறது.இவர்கள் மட்டும்மல்ல இந்த சமுதயமும் நம்மை இவ்வாரே நிர்பந்திகிறது.
நமக்கு ஒருவரை பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.ரசனை என்பது கட்டயமல்ல.அது உணர்ச்சி.
இதை தனி நபருடன் இணைக்கபடுவது இவ்விடம் தான்.
நம்மவர்கள் இதில் என்ன தவறு என்று கேட்ககூடும்.தனக்கு பிடித்தவரக ஒருவர் இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கபடுவது முதல் தவறு.
இங்கே ரசனை என்பதை தாண்டி தனி நபரின் நவீன அடிமையாகிறோம்.அவரின் அணைத்து செயல்களையும் நியாயபடுத்த வேண்டிய நிலைக்கு
தள்ளபடுகின்றோம்.திரைக்கு முன் திரைக்குக் பின் அவரின் அனைத்து செயலையும் காசு வங்காத வக்கீலாக நியபடுத்துகிரோம்.நாளடைவில்
அவரின் வெற்றி நம் வெற்றியகிறது.அவரின் போட்டியளர் நம் எதிரியகிறார்கள்.போட்டியளரின் திறமை மறுக்கபடுகின்றது.
ரசனையாளன் நவீன ரசிகனாக மாறும் இடம் தருணம் இது.இங்கு ரசிகன் ரசனை என்பதை விட தனி நபருக்கு அடிமையகின்றான்.
நம் நாயகனை களங்கபடுத்துவது நம்மை களங்கபடுத்துவது போன்ற நிலைக்கு தள்ளபடுகின்றோம்.
இதனை அடிமைதனம் என்பதை விட வேறு எந்த வார்தைகளால் அழைப்பது என்று தெரியவில்லை.
இந்த கூட்டம் படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரையும் உள்ளடக்கியது.படித்தவர்கள், படிக்காதவர்கள் தான் அடிமைகள்
நாங்கள் இல்லை என அடிமை பட்டத்தை படிக்காதவர்கள் தலையில் கட்டி தங்களை உயர்வனவர்களக காட்டிக்கொள்கிறர்கள்.
உண்மையில் இவர்களும் ஒரு வகையான அடிமைகள் என்பது மேற்கூறியதிலுந்து தெரியவரும்.
தன் நாயகன் தவறு செய்கிறார் அல்லது ரசிக்கும்படியக இல்லை என்ற போதிலும் அவரை உயர்வானவரக காட்டிக்கொள்வது கட்டாயமாகிரது.
இதனை அடிமைதனம் என்பதை விட வேறு எந்த வார்தைகளால் அழைப்பது.
அவரைபற்றி தவறாக பேசுவது தவறு என்று நாம் நினைக்கும் பொழுது நாம் அவரின் அடிமை என்பதை விட வேறு எந்த வார்தைகளால் அழைப்பது.
உண்மையில் அடிமை என்பவர்கள் முதலளிகளால், ஆதிக்கவதிகளால் பதிக்கப்பட்டவர்கள்.
தங்கள் நிலையை விரும்பி ஏற்றவர்கள் இல்லை.ஆனால் நீயோ விரும்பி அடிமையானவன்.
தானாக முன்வந்து அடிமையானவன். அதாவது தான் அடிமை என்பதை உணராத தானாக அடிமையகும் நவீன அடிமை.
சற்று சிந்தியுங்கள்
குறிச்சொற்கள்:ரசிகன் சினிமா அடிமை
உலகமயமாக்கல்
2 ஜூலை‘நீ’ அழிந்து போவாய்
சாபமல்ல
ஆன்மீகமுமல்ல
உலகமயமாக்கல்!
தண்ணீருக்கு பந்நாட்டுக்கம்பெனி
பிள்ளையாருக்கு ‘பிஸ்லரி’ அபிசகம்
ஆஃப்க்கு ‘அஃகுவஃபினா’
ஆம்
கங்கைகொன்டான் சுரண்டலின் முடிவு
விழித்துகொள்
இளநீருக்கு பதினைந்தா-அந்தோ
அநியாயம் பகல் கொள்ளை அலருகிராய்
கோலாவுக்கு இருபது!!!!!!!
மகிழ்ச்சியுடன் ‘cheers’
காதுகளில் விழுகிறது



